நான் நேற்று வெளியிட்ட பதிப்பிலுள்ளபடி
இதோ முழு விமர்சனம்.
இன்று
‘கடல் பயணங்கள்’ என்ற புத்தகத்தைப்
படித்து முடித்துவிட்டேன்.
இதுவரை,
இரண்டு
நாள்களில் நான் ஒரு தமிழ்ப்
புத்தகத்தை முழுமையாகப்
படித்து முடித்ததில்லை.
ஆனால் இந்தப்
புத்தகம், என்னை
உட்கார்ந்த இடத்தைவிட்டு
எழுந்திருக்க விடவில்லை.
நம்
எல்லோருக்கும் ’மாலுமி’
என்றால் முதலில் யாரைப் பற்றி
ஞாபகம் வரும்?
கொலம்பஸ்ஸும்
மார்கோ போலோவும் தான்.
இப்போதுதான்
ஆறாம் வகுப்பு படித்து
முடித்தேன் என்றால் இபின்
பதூதா பற்றி எதோ ஓரிரு
வாக்கியங்கள் தெரியும்.
ஆனால் இதுவரை
நீங்களோ நானோ,
செங் ஹே
என்பவரைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கோமா
அல்லது ஜான் கபோட் என்பவரின்
வாழ்க்கையில் நடந்த சாகசங்கள்தான்
நமக்குத் தெரியுமா?
இவர்களைத்
தவிர, வால்டர்
ராலே, ஜேம்ஸ்
குக், மெகல்லன்
என பல மாலுமிகளைப் பற்றி
இப்புத்தகத்தில் நமக்கு
எடுத்துக் கூறுகிறார்
நூலாசிரியர் மருதன் அவர்கள்.
இதுவரை
நான் நினைத்துக்கொண்டிருந்தது
கொலம்பஸ்தான் அமேரிக்காவைக்
கண்டறிந்தார்.
ஆனால்
இப்புத்தகத்தின் வாயிலாக
அமேரிக்காவை உண்மையாகக்
கண்டறிந்த அமேரிகோ வெஸ்புகியைப்
பற்றித் தெரிந்து கொண்டேன்.
சார்லஸ்
டார்வின் ஓரிடத்தில் அமர்ந்து
தன் கண்டுபிடிப்பைப் பற்றிய
ஆராய்ச்சியைச் செய்தார்
என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை.
அவர் ஒரு
கப்பலில் பயணம் மேற்கொண்டு,
பல புதிய
தீவுகளுக்குச் சென்றே அவர்
ஆராய்ந்தார்.
இவர்களைப்பற்றி
மட்டுமின்றி,
மேலும்
நிறைய மாலுமிகளைப் பற்றிய
சுவையான கதைகள் இப்புத்தகத்தில்
உள்ளன.
இப்புத்தகத்தைப்
படிக்கும்போது,
நானே ஒவ்வொரு
கதையிலும் பயணம் மேற்கொண்டதுபோல்
ஓர் உணர்வு ஏற்பட்டது.
கடலை
நேசிப்பவர்களுக்கும் வரலாற்றை
நேசிப்பவர்களுக்கும் என்னைப்
போன்ற புத்தகப் புழுக்களுக்கும்
இப்புத்தகம் மிகவும் பிடிக்கும்.
சென்னைப்
புத்தகக் கண்காட்சியில்
கிழக்கு பதிப்பகத்தில்
கண்டிப்பாகக் கிடைக்கும்.
மறக்காமல்
வாங்கிப் படியுங்கள்!
ஆகா ஆகா ஆகா... அம்மா பாரதி, அருமை, அருமை, ரத்தினத் தெறிப்பு.
ReplyDeleteநன்றி சார்
Deleteஅன்புள்ள பாரதி :
ReplyDeleteஅழகான எழுத்து, தெளிவான நடை. இவ்வளவு சீக்கிரம் புத்தகத்தைப் படித்துவிட்டு அருமையாக ஒரு கட்டுரையும் எழுதிவிடுவீர்கள் என்று நினைக்கவேயில்லை. உங்களுக்கு மட்டும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருந்தால் நான் எழுதியதைவிடப் பெரிய புத்தகத்தை எழுதி முடித்திருப்பீர்கள். என்னைவிட நன்றாகவும் உங்களால் எழுதியிருக்கமுடியும். நிஜமாகவே சொல்கிறேன்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது இத்தனை அழகாகக் கட்டுரை எழுதியது கிடையாது கம்ப்யூட்டரில் டைப் செய்வதை விடுங்கள், கம்ப்யூட்டரையே பார்த்தது கிடையாது.
உங்கள் கட்டுரையைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து நிறைய படியுங்கள். நீங்கள் என்னென்ன படிக்கிறீர்களோ அதைப் பற்றியெல்லாம் சுருக்கமாக எழுதுங்கள். பிடித்த புத்தகம், பிடிக்காத புத்தகம், போரடிக்கும் புத்தகம் என்று எல்லாவற்றையும் பற்றி எழுதுங்கள்.
ஆங்கிலத்தில் எப்படிப்பட்ட புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? பிடித்த எழுத்தாளர்கள் யார்?
அன்புடன்
மருதன்
As I am suffering from writing...
நன்றி அங்கிள்.
Deleteஅங்கிள் நான் இப்போது 8ஆம் வகுப்பில் படிக்கிறேன்.
நான் ஆங்கிலத்தில் எர்னெஸ்ட் எமிங்வே எழுதிய old man and the sea என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் Veronica Roth, Rick Riordan, James Dashner எழுதிய young adult fictions படித்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள பாரதி :
ReplyDeleteVeronica Roth நான் படித்ததில்லை ஆனால் டைவர்ஜண்ட் திரைப்படம் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான கதை. Dystopian நாவல்கள் பல திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன. அவற்றில் வேறு சிலவற்றையும் பார்த்திருக்கிறேன். எதிர்காலத்தில் இப்படியெல்லாம் ஆகலாம் என்று சொல்லும் சுவையான science fiction கற்பனைகள் இவை. இவற்றில் பல நிஜமாகவே நடக்கவும் செய்யலாம், யார் கண்டது? Isaac Asimov எழுதியதில் பெரும்பாலும் நடந்துவிட்டது.
மீண்டும் James Dashner படித்ததில்லை ஆனால் Maze Runner பார்த்திருக்கிறேன். டைவர்ஜண்ட் அளவுக்கு இது கவரவில்லை.
நான் இப்போது படித்துக்கொண்டிருப்பதும் ஒரு dystopian கதைதான். The Handmaid's Tale. இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்களும் வாசிக்கலாம்.
ஆறாம் வகுப்பு என்று நினைத்துவிட்டேன், எட்டாவது வகுப்பா? ம்ஹும் அப்போதும் நான் கம்ப்யூட்டரைப் பார்த்ததில்லை. இப்படி எழுதியதில்லை.
சரி, Veronica Roth எழுதியதில் நீங்கள் எந்த வகை? Dauntless, Amity, Erudite, Abnegation, Candor? இப்படி மனிதர்களை நிஜமாகவே இன்று பிரித்தால் எப்படி இருக்கும்? பிறகு ஒரு கட்டுரையாக எழுதிப் பாருங்கள்.
அன்புடன்
மருதன்
கண்டிப்பாக எழுதுவேன் அங்கிள். நான் ஒரு divergent. இல்லை ஒன்றுதான் என்றால் erudite/dauntless. எந்தத் தேர்வு எடுத்தாலும் இரண்டு அல்லது மூன்று வகைகள் வருகிறது.
Deleteநான் இன்னும் allegiant படித்து முடிக்கவில்லை.
Deleteஅருமையான தெளிவான நடை
ReplyDeleteபுலிக்குப் பிறந்தது பூனையாகாது