உலக கவிதை தின வாழ்த்துகள்! என் கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதையை இன்று பதிவிடுகிறேன். வான்வெளியிடம் கேட்டேன், ஒரு சொல்லின் பொருளை; நீ வாழும் பாரினில் சுற்றிப்பார் என்றது. அன்று தேடத் தொடங்கினேன் சிறப்பு என்ற வார்த்தையின் உண்மையான பொருளை. தூர தேசங்களில் தேடினேன் வியப்பூட்டும் பலர் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள் மெய் மறந்து நின்ற பின்னும் ஏதோ ஒன்று குறைந்தது என்னவென்று தெரியவில்லை. எனது தேசத்தில் தேடினேன், புல்லரித்து நின்றேன் வீரமும் திறனும் கொண்ட பெண்மணிகளைப் பார்த்தேன் அவர்களது வாழ்வையும் வென்ற கதையையும் கேட்டு வியந்தேன் ஆனாலும் தேடலில் தோற்றுப் போனேன். இறுதியாக என் வீட்டில் பார்த்தேன் சிறப்பின் சிற்பம் வாழ்ந்துகொண்டிருந்தாள் இருக்கும் தடம் தெரியாமல் என் வாழ்வின் ஒளியாக கண்டேன் சிறப்பின் பொருளை என் தாயின் வடிவில்.
As I am Suffering from Thinking...