Skip to main content

வாழ்வின் ஒளி

 


உலக கவிதை தின வாழ்த்துகள்! என் கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதையை இன்று பதிவிடுகிறேன்.


வான்வெளியிடம் கேட்டேன்,

ஒரு சொல்லின் பொருளை; நீ வாழும் பாரினில் சுற்றிப்பார் என்றது.

அன்று தேடத் தொடங்கினேன்

சிறப்பு என்ற வார்த்தையின்

உண்மையான பொருளை.


தூர தேசங்களில் தேடினேன்

வியப்பூட்டும் பலர் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்

மெய் மறந்து நின்ற பின்னும் 

ஏதோ ஒன்று குறைந்தது

என்னவென்று தெரியவில்லை.


எனது தேசத்தில் தேடினேன், புல்லரித்து நின்றேன்

வீரமும் திறனும் கொண்ட பெண்மணிகளைப் பார்த்தேன்

அவர்களது வாழ்வையும் வென்ற கதையையும் கேட்டு வியந்தேன்

ஆனாலும் தேடலில் தோற்றுப் போனேன்.


இறுதியாக

என் வீட்டில் பார்த்தேன்

சிறப்பின் சிற்பம் வாழ்ந்துகொண்டிருந்தாள்

இருக்கும் தடம் தெரியாமல் 

என் வாழ்வின் ஒளியாக

கண்டேன் சிறப்பின் பொருளை

என் தாயின் வடிவில்.

Comments

  1. சாட்டையடி பதிவு தோழி

    ReplyDelete
  2. கண் கலங்க வைத்த பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Saturdays with BK Uncle

Edit 1 : This is something I wrote a long time ago. repurposing for entertainment purposes. any harm thus caused isn't intentional; it happens to be a byproduct. Nobody knows how old BK Uncle is. Some say he's 60; some say he's awaiting his 80th birthday next month. He's been around for a long time. "Long time" might not seem so long, but for this young flat, it feels like an eternity. Old BK seemed nice; he'd converse with anyone he encountered. The four W's never mattered until they came out of him. People got used to his habits, like any obedient student would in an assembly. Well, most people. My interactions with BK Uncle have been quite amusing on my end and irritating on his. Incidentally, most of my interactions with BK Uncle happen on Saturdays. Probably because that's when I'm home, and I take a stroll in the lobby. Not so long ago, I'd play with my friends in the same lobby—it didn't matter what day of the week it was. Times...

Dude - Review

TL;DR - A Rare mainstream surprise with its heart in the right place. To begin with, I didn't expect any movie to make it to my blog this year, especially Dude. I was skeptical even while booking the tickets, and the pessimism only grew when a couple of close friends said they didn’t like it. For context: I didn’t enjoy Love Today , and Dragon was just okay. But if skepticism can ever lead to a pleasant surprise, Dude definitely proves it. I usually look for one out of two things from a film - a compelling narrative or solid entertainment. I don’t comment much on Tamil films because Tamil cinema, at least from what I have sampled, often misses both and at its worst, treats the female lead as an interchangeable prop, contributing no real agency to the story. It has been a long while since a mainstream entertainer offered a female character with intention, dimension, and presence. Dude does, and that alone deserves acknowledgement. PR struck like a typical Gen-Z actor in his first...

பௌ பௌ… ரெண்டு டீ

டீக்கடை கலாசாரத்தில் தீப்பிடித்து வளர்ந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று வீட்டுக்குத் தெரியாமல் பஜ்ஜி சாப்பிடுவது, மற்றொன்று நாய்கள் மேய்வது. போண்டா பஜ்ஜி முதல் போர்பான் பிஸ்கட் வரை பல்சுவைக்கு அடிமையாகிய நாய்கள், நம்மைப் போலவே டீக்கடை நிழலே சொர்க்கம் என்று வாழத்தொடங்கிவிட்டன. “நாயே” என்ற சொல்லுக்கு பொருள்கள் பல என்றாலும், அனைத்தும் திட்டும் அர்த்தங்களே. இன்றோ, ஒரு நாயை “நாய்” என்று சொல்வதே கங்கையில் கரைக்கவேண்டிய பாவம் ஆகிவிட்டது. அதற்குப் பெயர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியது போக, “ஸ்பா டே” என்று அமர்க்களம் செய்து இன்ஸ்டாக்ராமில் பதிவிடுகிறார்கள். அதைப் பார்த்து கருத்து சொல்பவன் கொடூரமானவனாகிறான். பதில் சொல்லாதவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். இதையொட்டி, பக்கத்துத் தெருவில் உள்ள டீக்கடையைச் சார்ந்த குறுக்கு சந்து நாய்கள் கட்சியின் தலைவர் பௌ-பௌ வுடன் ஒரு சிறிய உரையாடல். பௌ: பௌ பௌ… அர மணி நேரத்துல மோட்டார் நாய்கள் வந்தால் துரத்த வேண்டிய வேல இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிக்கலாமா? ந: ஓ ரைட்டு. கடந்த பத்து வருஷத்துல உங்க ஆளுங்க இந்த ஏரியால இவ்ளோ பழகிட்டாங்களே, நீங்க உங்க வீட்ட மிஸ் பண்ண...