டீக்கடை கலாசாரத்தில் தீப்பிடித்து வளர்ந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று வீட்டுக்குத் தெரியாமல் பஜ்ஜி சாப்பிடுவது, மற்றொன்று நாய்கள் மேய்வது. போண்டா பஜ்ஜி முதல் போர்பான் பிஸ்கட் வரை பல்சுவைக்கு அடிமையாகிய நாய்கள், நம்மைப் போலவே டீக்கடை நிழலே சொர்க்கம் என்று வாழத்தொடங்கிவிட்டன. “நாயே” என்ற சொல்லுக்கு பொருள்கள் பல என்றாலும், அனைத்தும் திட்டும் அர்த்தங்களே. இன்றோ, ஒரு நாயை “நாய்” என்று சொல்வதே கங்கையில் கரைக்கவேண்டிய பாவம் ஆகிவிட்டது. அதற்குப் பெயர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியது போக, “ஸ்பா டே” என்று அமர்க்களம் செய்து இன்ஸ்டாக்ராமில் பதிவிடுகிறார்கள். அதைப் பார்த்து கருத்து சொல்பவன் கொடூரமானவனாகிறான். பதில் சொல்லாதவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். இதையொட்டி, பக்கத்துத் தெருவில் உள்ள டீக்கடையைச் சார்ந்த குறுக்கு சந்து நாய்கள் கட்சியின் தலைவர் பௌ-பௌ வுடன் ஒரு சிறிய உரையாடல். பௌ: பௌ பௌ… அர மணி நேரத்துல மோட்டார் நாய்கள் வந்தால் துரத்த வேண்டிய வேல இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிக்கலாமா? ந: ஓ ரைட்டு. கடந்த பத்து வருஷத்துல உங்க ஆளுங்க இந்த ஏரியால இவ்ளோ பழகிட்டாங்களே, நீங்க உங்க வீட்ட மிஸ் பண்ண...
Comments
Post a Comment