இன்று நான் ஒரு
புதிய புத்தகத்தை எடுத்தேன். நீண்ட இடைவேளிக்குப் பின் தமிழ் புத்தகம் படிக்கத் தொடங்கினேன்.
அந்த புத்தகத்தின் பெயர் ‘ கடல் பயணங்கள்.’ இதைப் பற்றி தமிழ் இந்துவின் மாயாபஜாரில்
படித்தேன். இப்புத்தகத்தை எழுதியவர் மருதன் அவர்கள். இதை எடுத்த எனக்கு படிப்பதை நிறுத்துவது
மிகக் கடிணமாக இருந்தது. காரணம், அதன் சுவாரஸ்யம் தான்.
முதலில் வாஸ்கோ
ட காமாவைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அவரைத் தொடர்ந்து கொலம்பஸ், மார்கோ போலோ, செங்
ஹே, இபின் பதூதா, ஜேம்ஸ் குக், மெகல்லன், அமெரிகோ வெபுஸ்கி, பார்த்த்லோமிய டயஸ் என
பலரைப் பற்றிய கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும் அதில் இருந்தன. இன்னும் நால்வரைப்
பற்றி நான் படிக்க வேண்டும். நாளை முடித்து விடுவேன். இதுவரை எந்த தமிழ் புத்தகத்தையும்
நான் இவ்வளவு ஆர்வமாக படித்ததில்லை. யாருக்கெல்லாம் வரலாறும் கடல் பயணமும் பிடிக்குமோ,
அவர்களுக்கு இப்புத்தகம் மிகவும் பிடிக்கும். இப்புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கும்
கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது. அனேகமாக இன்று கனவில் நான் உலகத்தைச்
சுற்றி ஒரு குட்டிப் பயணம் மேற்கொள்வேன் என்று நினைக்கிறேன்.
விரிவான விமர்சனம் நான் படித்து முடித்த பின்.... அதுவரை காத்திருங்கள்.
Comments
Post a Comment