கோடை விடுமுறை
விட்டாச்சு. சும்மா வீட்டிலேயே உட்கார்ந்து தனியாகப் படம் பார்ப்பது போரடிக்கும்.
எனவே, நானும் என் நண்பர்களும் சேர்ந்துப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
அனைவருடன் சேர்ந்து பார்த்தால் ஒருவரை ஒருவர் கேலி செய்யலாம் என்ற யோசனை எங்கள்
அனைவரிடமும் இருந்தது. எந்த மாதிரியான படம் பார்க்கலாம் என்ற கேள்வி வந்த்ததும், என்னுடைய
தோழி "பேய்ப் படம் பார்க்கலாமா?" என்று கேட்டாள். இது விளையாட்டை
இன்னும் சுவாரஸ்யமாக்கியது. தினமும் மதியம் பேய்ப் படம் பார்ப்பது என்று முடிவு
செய்தோம்.
முதலில், பார்க்க
வேண்டிய படங்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தோம். அனபெல், லைட்ஸ் அவுட், இட்,
கான்ஜுரிங் போன்ற படங்களை இந்த வாரம் பார்ப்பதாக தீர்மானித்தோம். திட்டத்தின் படி,
நேற்று "இட்" என்ற படம் பார்த்தோம். உண்மயைக் கூறவேண்டும் என்றால், அந்தப்
படம் அற்புதமாகத்தான் இருந்தது, ஆனால் எனக்குப் பயமாகவே இல்லை. என் நண்பர்களோ,
அந்தக் கோமாளிப்பேயைக் காண்பிக்கும்போதெல்லாம் அலறினார்கள். ஒரு காட்சியில், அந்தக்
கோமாளிப்பேய் கதாநாயகியைப் பயமுறுத்த முயற்சி செய்யும். அப்போது அறை முழுவதும்
இரத்தம் சிதறும். அதற்கு என் நண்பர்கள், பயத்தில் ஒருவரை ஒருவர்
கட்டிப்பிடித்துக்கொண்டு கத்தினர். அதைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான்
வந்த்தது.
கோடை விடுமுறை இவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும்
எத்தனைப் படங்கள் பார்ப்போம் என்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்;
இந்த முறை விடுமுறை மிகவும் "பேய்டாஸ்டிக்" ஆக இருக்கப்போகிறது.
பேய்ப் படமெல்லாம் இரவில் தான் பார்க்கணும்.
ReplyDeleteஹாஹ்ஹாஹ்ஹா. ..
ReplyDelete