விடுமுறைக் காலம் வந்துவிட்டது. கையில் கிடைப்பதையெல்லாம் வாய்க்குள் அடைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வராது? வெளியே சென்று விளையாடலாம் என போனாலும், வீசும் காற்றில் சூடான நொறுக்குத்தீனியின் மணத்தை அடித்துக்கொள்ள எதனால் முடியும்? அவ்வாறு, இதுவரை நாம் எத்தனையோ தீனிகளை உண்டிருப்போம். ஆனால், அது நம் கைய்க்குள் வருவதற்கு முன், சூடான எண்ணணெய்க்குள் பொறிப்பதற்கு முன், எப்படி உருவானது, யார் உருவாக்கினார்கள் என்று யோசித்திருப்போமா? இந்தக் கேள்வி இன்று நான் சமோசா சாப்பிட்டபோது வந்தது. சரி, தேடுவோம் என உட்கார்ந்தேன். அதனைப் பற்றிப் படித்தபோது, ஒரு சிறிய முக்கோணத்திற்கு இவ்வளவு வயதாகிவிட்டதா என்று வியந்தேன்!
மத்திய ஆசியப் பகுதியில் தோன்றிய இந்த முக்கோண வடிவம், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா எனத் தனது பயணத்தைக் கிழக்குத் திசையில் தொடர்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் இதன் பெயர் சன்சுபாக். பெர்சியாவில் இதனை அரசர்கள் உணவாக உண்டு வந்தனர். மெதுவாக, சன்சுபாக் பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்கிறது. அமிர் குஸ்ரோ, இதனை அரசர்களும் இளவரசர்களும் விரும்பி உண்டனர் என்று எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்ல, பதினான்காம் நூற்றாண்டில் ஒரு பயணியாக இந்தியாவுக்கு வந்த இபின் பட்டுடா, மொகம்மது துக்லக்கின் சபையில் மதிய உணவோடு சமோசா பரிமாறப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். அப்போது அதன் பெயர் சம்பூசாவாம்.
காலப்போக்கில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், நம்மைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கும் சென்ற சம்பூசா, கொஞ்சம் கொஞ்சமாகப் பெயர் மாற்றமும், உள்ளே இருக்கும் பொருள்கள் மாறியும் இன்று நம் கையில் சமோசாவாகச் சுடச்சுட உட்கார்ந்திருக்கிறது. நூற்றாண்டுக் கணக்காக வாழும் இதை இன்று சில நிமிடங்களில் தயார் செய்து நாம் சாப்பிடுகிறோம். காலம் எவ்வளவு வேகமாகிவிட்டது! சரி, இப்போது என் சமோசா ஆறிவிடப்போகிறது, நான் அதை உண்கிறேன்!

Comments
Post a Comment